கபிஸ்தலம் அருகே செப்டிக் டேங்கில் விழுந்து பசுமாடு பலி

கபிஸ்தலம் அருகே செப்டிக் டேங்கில் விழுந்து பசுமாடு பலி
X

மாதிரி படம்

கபிஸ்தலம் அருகே மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடு செப்டிக் டேங்கில் விழுந்து பலியானது

கபிஸ்தலம் அருகே உள்ள தியாக சமுத்திரம் ஊராட்சி புள்ளபூதங்குடி தெற்கு தெருவில் வசிக்கும் காளிமுத்து மகன் முத்துக்குமரன் என்பவரது ஐந்து வயது மதிக்கத்தக்க பசுமாடு மேய்ச்சலுக்கு சென்றுள்ளது.

மேய்ச்சல் முடிந்து வீட்டுக்குச் சென்ற பொழுது எதிர்பாராத விதமாக பூதங்குடி அரசு உயர்நிலை பள்ளியின் பின்புறம் உள்ள செப்டிக் டேங்கில் (கழிவுநீர் தொட்டியில்) விழுந்ததில் பரிதாபமாக இறந்தது.

இது குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் செப்டிக் டேங்கில் விழுந்து பலியான பசுமாட்டை மீட்டு மாட்டின் உரிமையாளர் முத்துக்குமரனிடம் ஒப்படைத்தனர.

Tags

Next Story