கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்

கும்பகோணம் ஒழுங்குமுறை  விற்பனை கூடத்தில்  பருத்தி ஏலம்
X

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற பருத்தி ஏலம். 

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று பருத்தி ஏலம் நடைபெற்றது.

தஞ்சாவூர் விற்பனைக்குழு செயலாளர் சுரேஷ்பாபு தலைமையில், விற்பனைகூட கண்காணிப்பாளர் தாட்சாயினி முன்னிலையில் நடைபெற்ற ஏலத்தில் கும்பகோணத்தை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து 1000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் 4473 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர்.

பண்ருட்டி, விழுப்புரம், கும்பகோணம், செம்பனார்கோவில், திருப்பூர், குண்டூர் சார்ந்த 10 வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதில், அதிகபட்ச விலையாக ரூ.8069 எனவும், குறைந்தபட்ச விலையாக ரூ.7459 எனவும், சராசரி விலையாக ரூ.7679 என விலை நிர்ணயிக்கப்பட்டது. பருத்தியின் மதிப்பு சராசரியாக ரூ. 3 கோடியே 44 லட்சம் ரூபாய் ஆகும்.



Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil