கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 1,640 குவிண்டால் பருத்தி ஏலம்

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 1,640 குவிண்டால் பருத்தி ஏலம்
X
ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 1 குவிண்டால் பருத்தி சராசரி விலையாக ரூ.7, 559 -க்கு நிர்ணயம் செய்து ஏலம் எடுக்கப்பட்டது.

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி் ஏலம் நடைபெற்றது.

தஞ்சாவூர் விற்பனைக்குழு செயலாளர் சுரேஷ்பாபு தலைமையிலும் விற்பனைகூட கண்காணிப்பாளர் பிரியமாலினி முன்னிலையிலும் நடைபெற்ற ஏலத்தில் கும்பகோணத்தை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து விவசாயிகள் மொத்தம் ஆயிரத்து 640 குவிண்டால் பருத்தியை கொண்டு வந்திருந்தனர். இதன் சராசரி மதிப்பு ரூ. 124 லட்சம் ஆகும்.

விவசாயிகள் எடுத்து வந்த பருத்தியை பண்ருட்டி, விழுப்புரம், கும்பகோணம், செம்பனார்கோவில் , திருப்பூர், குண்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 10 வியாபாரிகள் ஏலம் கேட்டனர். இதில் பருத்திக்கு அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்று ரூ.7 ஆயிரத்து 789 -ம், குறைந்தபட்ச விலையாக குவிண்டால் ஒன்று ரூ 7 ஆயிரத்து 209 சராசரி விலையாக ரூ.7 ஆயிரத்து 559 க்கு நிர்ணயம் செய்யப்பட்டு ஏலம் எடுக்கப்பட்டது.


Tags

Next Story
Oppo Find X8 இணையத்தைக் கலக்கும் மொபைல் சீரிஸ்..! என்ன விலை? | oppo find x8 pro review in tamil