பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலம்
X
பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற பருத்தி ஏலம்.
By - A.Madhankumar, Reporter |23 July 2021 8:14 PM IST
பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலம் இன்று நடைபெற்றது.
தஞ்சாவூர் விற்பனைக்குழு செயலாளர் சுரேஷ்பாபு தலைமையில்,விற்பனைகூட கண்காணிப்பாளர் பிரியமாலினி முன்னிலையில் நடைபெற்ற ஏலத்தில், பாபநாசம் சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து 1000 விவசாயிகள், 3176 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர். சேலம், பண்ருட்டி, கடலூர்,விழுப்புரம், செமினார்கோவில், கும்பகோணம், சார்ந்த 13 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர்.
பருத்தியின் மதிப்பு சராசரியாக ரூ. 2,38,00000 ஆகும். இதில் வியாபாரிகளின் அதிகபட்ச விலையாக ரூ. 7789 எனவும், குறைந்தபட்ச விலையாக ரூ. 6889 எனவும், சராசரி விலையாக ரூ. 7519 என விலை நிர்ணயிக்கப்பட்டது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu