கும்பகோணம் நீதிமன்றத்தில் அரசியல் சாசன தின விழா

கும்பகோணம் நீதிமன்றத்தில் அரசியல் சாசன தின விழா
X

 அரசியல் சாசன நாள் விழாவில்  பேசிய தஞ்சை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பிரகாஷ்

வழக்காடிகள் நீதிமன்றம் நோக்கி நீதி வேண்டி வரும்போது வழக்கறிஞர்கள் நம்பிக்கை ஏற்படும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டும்

கும்பகோணம் நீதிமன்றத்தில் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், தஞ்சை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பிரகாஷ் வழிகாட்டுதல்படி நீதிமன்ற வளாகத்தில் தேசிய சட்ட நாள் என்றழைக்கப்படும் அரசியல் சாசன தினம் நடைபெற்றது.

கும்பகோணம் வழக்கறிஞர் சங்க துணைத் தலைவர் இளங்கோவன் வரவேற்றார். செயலாளர் தரணிதரன், இணைச் செயலாளர் கலையரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூத்த வழக்கறிஞர் கண்ணன் அரசியல் சாசன உறுதிமொழி வாசித்தார். இந்நிகழ்ச்சியில், தஞ்சை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பிரகாஷ், கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சண்முகப்பிரியா, முதன்மை சார்பு நீதிபதி வெங்கடேசப்பெருமாள், கூடுதல் சார்பு நீதிபதி மும்தாஜ், குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் தரணிதர், பாண்டிமகாராஜா, திருவிடைமருதூர் நீதிமன்ற மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நிலவரசன் மற்றும் கும்பகோணம், திருவிடைமருதூர் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள், நீதிமன்ற ஊழியர்கள் அனைவரும் அரசியல் சாசன உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்கள்.

அதனைத் தொடர்ந்து மூத்த வழக்கறிஞர்கள் ஆறுமுகசாமி, துரை ஜெயபால், முரளி, விவேகானந்தன், அரசு குற்றவியல் வழக்கறிஞர் உத்திராபதி ஆகியோர் அரசியல் சாசன தினத்தைப் பற்றி பேசினார்கள். தஞ்சை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பிரகாஷ் பேசுகையில், வழக்காடிகள் வழக்கு மன்றம் நோக்கி நீதி வேண்டி வரும்போது வழக்கறிஞர்கள் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டிய அவசியம் என வலியுறுத்தினார். வழக்கறிஞர் சங்க பொருளாளர் செந்தில்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள், நீதிமன்ற ஊழியர்களுடன் இணைந்து கும்பகோணம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் சட்ட தன்னார்வலர்கள் ராஜேந்திரன், குணசீலன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!