கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல்

கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல்

கும்பகோணம் மாநகராட்சியைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்

கும்பகோணத்தில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீர் சாலைமறியல்

கும்பகோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மற்றும் காளியம்மன் கோவில் தெரு பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து கழிவுநீர் சாலைகளில் சென்றபடி உள்ளது.

இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பாரதி தலைமையிலும், நகர செயலாளர் மதியழகன் முன்னிலையிலும் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள காளியம்மன் கோவில் தெருவில் கழிவுநீர் தேங்கி இருக்கும் பகுதியில் திடீர் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து, கும்பகோணம் டிஎஸ்பி அசோகன் உள்ளிட்ட போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து சாலைமறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் தாற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் போது மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரின் ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து உடனடியாக கழிவுநீர் அகற்றும் வாகனம் மாநகராட்சி நிர்வாகத்தால் கொண்டுவரப்பட்டு சீரமைப்பு பணி தொடங்கியது. இந்த நிலை மீண்டும் தொடர்ந்தால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்தனர்.

Tags

Next Story