கும்பகோணம் அருகே அரசு வேலை வாய்ப்பிற்கான இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்
கும்பகோணம் அருகே திருப்புறம்பியம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் கல்வி நல அறக்கட்டளை மற்றும் திருப்புறம்பியம் ஊராட்சி இணைந்து நடத்தும் அரசு வேலை வாய்ப்பிற்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கின.
இந்நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். சங்கத் தலைவர் வடிவேலு, செயலாளர் ராமேஷ், துணைச் செயலாளர் வினோத் குமார் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர். திருப்புறம்பியம் ஊராட்சி மன்ற தலைவர் வைஜயந்தி சிலம்பரசன், ஒன்றிய குழு உறுப்பினர் தியாகராஜன், நிர்வாக குழு தலைவர் மகேந்திரன், துணைத் தலைவர் முருகேசன், செயலாளர் ருமன்செந்தில், துணைத் தலைவர் ஜெயராஜ், பொருளாளர் திருமுருகன், துணைப் பொருளாளர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் வி.சி.க. மண்டல செயலாளர் விவேகானந்தன், அ.தி.மு.க. அம்மா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் அழகு.த. சின்னையன், பஞ்சாப் நேஷனல் வங்கி செல்வராசன், வி.சி.க. சட்டமன்ற தொகுதி செயலாளர் முல்லை வளவன், மற்றும் அழகேசன், பிரவீன்ராஜ், கோவிந்தராஜன், நாகராஜன், சாந்தி, கென்னடி கண்ணன், பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிர்வாகக்குழு துணைச் செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu