கும்பகோணம் அருகே கடத்தப்பட்ட குழந்தை தனிப்படை போலீஸாரால் மீட்பு

கும்பகோணம் அருகே கடத்தப்பட்ட குழந்தை தனிப்படை போலீஸாரால்  மீட்பு
X
கன்னியாகுமரியில் குழந்தையுடன் பதுங்கியிருந்த மைக்கேலை போலீசார் கண்டுபிடித்து அவரிடம் இருந்து குழந்தையை மீட்டனர்

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியை சேர்ந்த ஆனந்த், நாகம்மாள் தம்பதியின் 11 மாத குழந்தையான முகமது சுலைமான். கடந்த 15-ஆம் தேதி வீட்டில் படுத்திருந்த குழந்தையை மர்ம நபர்கள் கடத்திச் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து பட்டீஸ்வரம் போலீஸ் நிலையத்தில் நாகம்மாள் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், நாகம்மாள் வீட்டின் அருகில் குடியிருந்து வரும் மீனாட்சி என்பவருடைய கணவர் மைக்கேல் என்பவர், குழந்தையை கடத்திச் சென்றிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, எஸ்பி தனிப்படை போலீசார், கடந்த ஒரு வாரமாக குழந்தையை கடத்தி சென்ற மைக்கேலை தேடி வந்தனர். இந்நிலையில், கன்னியாகுமரியில் குழந்தையுடன் பதுங்கியிருந்த மைக்கேலை போலீசார் கண்டுபிடித்து அவரிடம் இருந்து குழந்தையை மீட்டனர். அதனைத் தொடர்ந்து மைக்கேலிடம் நடத்திய விசாரணையில், தனது மனைவி மீனாட்சியை பிரிந்து இரண்டு ஆண்டுகள் ஆவதாகவும், அவரிடம் உள்ள தனது குழந்தைகளை அழைத்துச் செல்ல வந்த போது, அவர் குழந்தைகளுடன் மாயமாகியதால், மீனாட்சியை மிரட்டுவதற்காக பக்கத்து வீட்டு குழந்தையை தூக்கி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.பின்னர் மைக்கேலையும், குழந்தையை கடத்த உதவியாக இருந்த அவரது நண்பர் ஆறுமுகம் என்பவரையும் கைது செய்தனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!