திருபுவனம் செங்குந்தர் மகாஜன சங்க கல்வி அறக்கட்டளை மகாசபை கூட்டம்

திருபுவனம் செங்குந்தர் மகாஜன சங்க கல்வி அறக்கட்டளை மகாசபை கூட்டம்
X
திருபுவனம் செங்குந்தர் கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
திருபுவனம் செங்குந்தர் மகாஜன கல்வி சங்கத்தின் செங்குந்தர் மகாஜன கல்வி அறக்கட்டளை மகாசபை கூட்டம் நடைபெற்றது.

கும்பகோணம் அருகே திருபுவனம் செங்குந்தர் மகாஜன கல்வி சங்கம் செங்குந்தர் மகாஜன கல்வி அறக்கட்டளை சார்பில் 24 ஆம் ஆண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா மற்றும் மகாசபை கூட்டம் செங்குந்தர் மகாஜன கல்வி சங்க பொருளாளர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.

இதில் 6 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை அதிக மதிப்பெண் பெற்ற 56 மாணவ மாணவிகளுக்கு ஆயிரம் பொற்காசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் செங்குந்தர் மகாஜன கல்வி சங்கம் தலைவர் ரங்கசாமி, நிர்வாக ஆலோசகர் மகாலிங்கம், சிவலிங்கம், தி.கோ சில்க்ஸ் தலைவர் தியாகராஜன், இயக்குனர் சேகர், கேபிள் நட்ராஜன், செங்குந்தர் கல்வி சங்கம் மாவட்ட தலைவர் பொருளாளர் சந்திரசேகரர், சோழன் பட்டு கூட்டுறவு சங்கம் துணைத் தலைவர் வைரவேல், அம்மாசத்திரம் கல்வி சங்க செயலாளர் சந்திரகாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு ஊக்கப் பரிசு வழங்கினார்கள்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!