சாரங்கபாணி கோவில் தேர் கட்டும் பணிகள் தொடக்கம்

சாரங்கபாணி கோவில் தேர் கட்டும் பணிகள் தொடக்கம்
X

கும்பகோணத்தில் ஆசியாவிலேயே மூன்றாவது பெரிய தேராக விளங்கிவரும் சாரங்கபாணி கோவில் சித்திரை தேரை வடிவமைப்பதற்கான பந்தக்கால் நடும் பணி நடைபெற்றது.

கும்பகோணத்தில் 108 வைணவ தலங்களில் ஒன்றாக சாரங்கபாணி கோவில் விளங்கி வருகிறது . 7 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவிலான இங்கு சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா அடுத்த மாதம் நடைபெற உள்ளது. ஆசியாவிலேயே திருவாரூர் தியாகராஜர் கோவில் , ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்களின் தேர்களுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய தேர் என கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேர் அழைக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு சாரங்கபாணி கோவில் சித்திரை திருவிழா அடுத்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி தேரை வடிவமைப்பதற்காக பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. இதற்காக கோவில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேரின் முன்பாக பந்தகாலுக்கு சந்தனம், குங்குமம் வைத்து மா இலை தோரணம், மாலை அணிவிக்கப்பட்டு சாம்பிராணி மற்றும் தீபாராதனை காட்டப்பட்டு பந்தக்கால் நடப்பட்டது. தொடர்ந்து தேருக்கு தீபாராதனை காட்டப்பட்டு தேர் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி