கும்பகோணத்தில் மாசி மகத்தை முன்னிட்டு சக்கரபாணி கோயில் தேரோட்டம்

கும்பகோணத்தில் மாசி மகத்தை முன்னிட்டு சக்கரபாணி கோயில் தேரோட்டம்
X

கும்பகோணத்தில் மாசி மகத்தை முன்னிட்டு சக்கரபாணி கோயில் தேரோட்டம்

கும்பகோணத்தில் மாசி மகத்தை முன்னிட்டு சக்கரபாணி கோயில் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது

கும்பகோணம் அருள்மிகு சக்கரபாணி ஸ்வாமி திருக்கோயில் மாசிமகப் பெருந்திருவிழா கடந்த 09ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தியாவிலேயே ஶ்ரீசக்கரராஜாவிற்கென்று தனிக்கோயில் கும்பகோணத்தில் மட்டும் தான் உள்ளது. சிவ விஷ்ணு சொரூபமாக காட்சியளிக்கும் ஶ்ரீ சக்கரபாணி ஸ்வாமி ஶ்ரீ சூரியபகவானின் அம்சமாக திகழ்வதால் பாஸ்கரஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. புகழ்பெற்ற இத்திருக்கோயிலில் மாசிமகத்தை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது.

தமிழகத்திலேயே இயந்திரத்தின் உதவி இல்லாமல் பக்தர்களால் மட்டுமே ஶ்ரீ சக்கரராஜா என்ற திருநாம முழக்கத்துடன் அகண்ட வீதியில், வானுயர்ந்த நிலையில், சீர்மிகு அலங்காரத்தில் எழிலுடன் பவனி வரும் ஶ்ரீ சக்கரராஜா தேரோட்டம் சிறப்புமிக்க ஒன்றாகும். இத்திருத்தேரோட்டத்தில் அருள்மிகு சக்கரபாணி சுவாமி விஜயவல்லி தாயார் மற்றும் சுதர்சன வல்லி தாயார் ஆகியோருடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

Tags

Next Story