கும்பகோணத்தில் வழிபறியில் ஈடுபட்ட 5 பேர் கைது
பறிமுதல் செய்யப்பட தங்கநகைகள்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதிகளில் தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவம் நடந்து வந்தது. குற்றவாளிகளை விரைந்து பிடிக்க, தஞ்சாவூர் மாவட்ட எஸ்பி தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவு படி, கும்பகோணம் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மேற்பார்வையில், தனிப்படை எஸ்ஐ கீர்த்திவாசன் தலைமையில் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 2 மாதங்களாக கும்பகோணம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் தொடர்ந்து 36 இடங்களில் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியை சேர்ந்த அஜய்குமரன், சான்டி (எ) சந்தோஷ், சிலம்பு (எ) சிலம்பரசன், ஹரிதாஸ் , ஜகன் (எ) தமிழரசன் ஆகிய 5 பேரையும் நாச்சியார்கோவில் பகுதியில், பிடித்து அவர்களிடமிருந்து 11 பவுன்நகைகள், இரண்டு பைக்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இவர்கள் 5 பேரும் ரவுடி பட்டியலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu