கும்பகோணம் பகுதியில் கஞ்சா விற்ற ஆட்டோ டிரைவர் உட்பட 3 பேர் கைது

கும்பகோணம் பகுதியில் கஞ்சா விற்ற ஆட்டோ டிரைவர் உட்பட 3 பேர்  கைது
X
கைது (பைல் படம்)
கும்பகோணம் பகுதியில் கஞ்சா விற்ற ஆட்டோ டிரைவர் உட்பட 3 பேரை போலீசார் கைது

கும்பகோணம் பகுதியில் கஞ்சா விற்பதாக எஸ்பி தேஷ்முக் சேகருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் கும்பகோணம், திருவிடைமருதுார் போலீஸ் உட்கோட்ட குற்ற கண்டுபிடிப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் கீர்த்திவாசன், காமராஜ் மற்றும் போலீசார் கருப்பூர் மற்றும் தாராசுரம் பைபாஸ் சாலைகளில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக சென்ற ஆட்டோவை சோதனையிட்டதில் தலா 30 கிராம் கொண்ட 20 கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை போலீசார் கண்டெடுத்தனர்.

ஆட்டோ ஓட்டி வந்த மாதுளம்பேட்டை தெரு ஆட்டோ டிரைவர் காளிதாசை (30) கைது செய்து ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோல பாபநாசம் மார்க்கத்தில் இருந்து பைக்கில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி சோதனையிட்டதில் பிளாஸ்டிக் பையில் 600 கிராம் கஞ்சா இருந்துள்ளது.

புதுக்கோட்டை பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஓட்டலின் பின்புறம் சதீஷ் என்பவரிடம் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பதாக தெரிவித்தனர்.

இதில் ஈடுபட்ட அரியலுார் மாவட்டம் ஜெயங்கொண்டம் மேலணிக்குழி, ஏரி மேட்டுத் தெருவில் வசிக்கும் தேவேந்திரன் (21), விஜய் (20) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து, ஓட்டி வந்த பைக்கை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!