சௌராஷ்டிரா மொழியில் ஓட்டு கேட்ட வேட்பாளர்

சௌராஷ்டிரா மொழியில் ஓட்டு கேட்ட வேட்பாளர்
X
கும்பகோணத்தில் ஓட்டஹோ...ஓட்டஹோ என சவுராஷ்டிரா பாசையில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்.

கும்பகோணம் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் வேட்பாளராக போட்டியிடுகிறார். இதையடுத்து அவர் கும்பகோணம் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அதன்படி இன்று காலை கும்பகோணம் துவரங்குறிச்சி பகுதியில் வாக்கு சேகரிப்பின் போது அப்பகுதியில் சில சவுராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசிப்பதை அறிந்து அங்கிருந்த சவுராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை அழைத்து அதிமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு சவுராஷ்டிரா பாஷையில் வாக்கு சேகரித்தார்.

அப்போது அங்கு வசிக்கும் சௌராஷ்டிரா அல்லாத பொதுமக்கள் என்ன பேசுகிறார்கள் என புரியாமல் அரசியல்வாதிகள் தமிழில் பேசினாலே புரியாது இதில் இதுவேறையா என முணுமுணுத்தபடி வேடிக்கைகும்பகோணத்தில் ஓட்டஹோ...ஓட்டஹோ என சவுராஷ்டிரா பாசையில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர். பார்த்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!