கும்பகோணம் அருகே மின்கம்பத்தில் மோதி சிறுவன் உயிரிழப்பு

கும்பகோணம் அருகே மின்கம்பத்தில் மோதி சிறுவன் உயிரிழப்பு
X

விபத்தில் பலியான சிறுவன் பாலாஜி.

வேகமாக இருசக்கர வாகனம் ஓட்டி வந்த சிறுவன் மின்கம்பம் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழப்பு

கும்பகோணம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது ஒரே மகன் பாலாஜி( 17). இவர் தனது வீட்டிலிருந்து அருகிலுள்ள சோலையப்பன் தெருவிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அந்தப் பகுதியில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்ற போது பாலாஜி ஓட்டி வந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிரே இருந்த மின் கம்பம் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பாலாஜி தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்கம்பத்தில் மோதி சம்பவ இடத்திலேயே சிறுவன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!