திருப்பனந்தாளில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பனந்தாளில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
X

பாரதிய ஜனதா கட்சியினரின் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருப்பனந்தாளில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பனந்தாள் கடைவீதியில் பாரத பிரதமரின் பஞ்சாப் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகளை கண்டித்தும், காங்கிரஸ் கட்சியின் அரசியல் காழ்ப்புணர்ச்சியை கண்டித்தும் பாரதிய ஜனதா கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சாக்கோட்டை சதீஷ்குமார் வழிகாட்டுதலின் படி பட்டியல் அணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு பட்டியல் அணி மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.

கல்வியாளர் பிரிவு முன்னாள் மாவட்டத் தலைவர் பசும்பொன் பாண்டியன், வர்த்தகப் பிரிவு மாநில செயலாளர் கராத்தே ராஜா, திருப்பனந்தாள் தெற்கு ஒன்றிய தலைவர் சிவக்குமார், திருப்பனந்தாள் வடக்கு ஒன்றிய தலைவர் ராதா, குடந்தை வடக்கு ஒன்றிய தலைவர் சிவக்குமார், ஊரக மற்றும் உள்ளாட்சித் பிரிவு மாவட்ட தலைவர் மணிமாறன், அமைப்பு சாரா பிரிவின் மாவட்ட தலைவர் செல்வராஜ், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் திலீப்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சாக்கோட்டை சதீஷ்குமார் கண்டன உரையாற்றினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!