நிதி நிறுவனம் நடத்தி பணமோசடி: கட்சி இருந்து நீக்கி பாஜக தலைமை கழகம் அறிக்கை
பாஜக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை.
ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கப்படும் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டம் தெருவைச் சேர்ந்த எம்.ஆர்.கணேஷ்-எம்.ஆர்.சுவாமிநாதன். இவர்கள் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் இரட்டிப்பாக பணம் தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கும்பகோணத்தில் கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் சூழலில், இன்று கும்பகோணம் முழுவதும் ஹெலிகாப்டர் சகோதரர்கள் ரூ.600 கோடி பொதுமக்களிடமும் வர்த்தகர்களிடம் மோசடி செய்துவிட்டதாக போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.
இந்நிலையில் மோசடி செய்ததாக கூறப்படும் ஹெலிகாப்டர் சகோதரர்களில் ஒருவரான எம்.ஆர். கணேஷ் தஞ்சை வடக்கு மாவட்ட வர்த்தக பிரிவு தலைவராக இருந்ததைதொடர்ந்து பா.ஜ.க பிரமுகர் பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக தொடர்ந்து செய்திகள் வெளியானது. இதையடுத்து தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழக பாஜக தலைமைக்கு எம்ஆர் கணேஷ் மீது புகார்கள் சென்றுள்ளது. அதன் அடிப்படையிலும், மாநில தலைமை அறிவுறுத்தலின்படி தஞ்சை வடக்கு மாவட்ட வர்த்தக பிரிவு பதவியில் இருந்து எம்ஆர் கணேஷ் விடுவிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu