திருவிடைமருதூர் - திமுகவில் ஐக்கியமான பாஜகவினர், மாற்றுக்கட்சியினர்

திருவிடைமருதூர் - திமுகவில் ஐக்கியமான பாஜகவினர், மாற்றுக்கட்சியினர்
X

திருவிடைமருதூரில், திமுகவில் இணைந்த பாஜகவினர். 

திருவிடைமருதூரில், பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி, நூற்றுக்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் கலைஞர் பாசறையில், பாரதிய ஜனதா கட்சி தொழிற்சங்க மாநில இணை அமைப்பாளர் மனோகரன் தலைமையில் பாரதிய ஜனதா இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் தினேஷ்குமார் மற்றும் வஉசி அமைப்பு மக்கள் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சியில் இருந்து விலகி, மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் தலைமையில் திமுகவில் இணைந்தனர்.

இந்நிகழ்ச்சியில், திருப்பனந்தாள் ஒன்றிய துணைத்தலைவர் அண்ணாதுரை, ஆடுதுறை பேரூராட்சி செயலாளர் இளங்கோவன், திருவிடைமருதூர் நகர செயலாளர் சுந்தரஜெயபால், வழக்கறிஞர் உத்திராபதி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் ராஜா, சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story