கும்பகோணத்தில் பாஜக தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்

கும்பகோணத்தில் பாஜக தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்
X

தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமையில் கும்பகோணத்தில் நடைபெற்றது. 

கும்பகோணத்தில் பாஜக தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

பாரதிய ஜனதா கட்சியின், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமையில் கும்பகோணத்தில் நடைபெற்றது. இதில், கும்பகோணம் மாநகருக்கு குடி தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்க குடிதாங்கி கிராமம் அருகே கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை அமைத்துத் தர தமிழக அரசை கேட்டுக் கொள்வது; சிமெண்ட், கட்டுமான பொருட்கள் மற்றும் மளிகை பொருட்கள் அனைத்திலும் விலை ஏற்றத்தை கண்டுள்ளதாக, திமுக அரசை கண்டிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயபாலன் வரவேற்றார். விவசாய அணி மாநில துணைத்தலைவர் ஜீவா சிவகுமார், மாவட்ட பார்வையாளர் அண்ணாமலை, மாவட்ட பொதுச் செயலாளர்கள் வெங்கடேசன், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாநில பார்வையாளர் கல்வியாளர் பிரிவு ஜெயராமன் கலந்து கொண்டார். கும்பகோணம் வடக்கு ஒன்றிய தலைவர் சிவக்குமார் நன்றி கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!