கும்பகோணம் அருகே ராமர் கோவிலில் பா.ஜ.க. மாவட்டத் தலைவர் வழிபாடு

கும்பகோணம் அருகே ராமர் கோவிலில் பா.ஜ.க. மாவட்டத் தலைவர் வழிபாடு
X

கும்பகோணம் ராமர்கோவிலில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் சதீஷ்குமார் வழிபாடு செய்தார்.

கும்பகோணம் அ்ருகே ராமர் கோவிலில் பா.ஜ.க. மாவட்டத் தலைவர் சாக்கோட்டை சதீஷ் குமார் வழிபாடு செய்தார்.

தமிழகத்தில் ராமர் கோயிலே இல்லை என்று விமர்சித்த காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணிக்கு தேசபக்தியும் தெய்வீகபக்தியும் கொடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சாக்கோட்டை சதீஷ்குமார் கும்பகோணத்தில் அமைந்திருக்கும் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ராமசுவாமி கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.

இந்நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர் சோழா, பசும்பொன் பாண்டியன், அறிவுசார் பிரிவு மாவட்ட தலைவர் வெங்கட்ராமன், இளைஞர் அணி மாவட்ட தலைவர் ஹரிகேஷ், அறிவுசார் பிரிவு மாவட்ட செயலாளர் கணேஷ், மற்றும் செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story