இன்று ஆவணி அவிட்டம்: கும்பகோணத்தில் பல்வேறு கோவில்களில் நடைபெற்றது
கும்பகோணத்தில் நடைபெற்ற ஆவணி அவிட்டம் விழா
ஆண்டுதோறும் ஆவணி மாதம் பௌர்ணமியும், அவிட்ட நட்சத்திரமும் கூடிய நன்னாள் ஆவணி அவிட்டம் எனப்படும். அதன்படி இந்த அவிட்டநட்சத்திரம் ஆடி மாத்திலேயே வந்ததால் நேற்று ஆவணி அவிட்டமான உபகர்மா என்ற பூணூல் அணியும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கும்பகோணம் பகுதியில் உள்ள யானையடிஅருகில் உள்ள விநாயகர் கோயில், பகவத்விநாயகர் கோயில், ஜெகநாதர் பிள்ளையார்கோயில், உச்சிபிள்ளையார்கோயில், காஞ்சிசங்கர மடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிராமணர்கள், விஸ்வகர்மாவினர், சௌராஷ்டிராவினர், ஆரிய வைசியர், தேவாங்க செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பூணூல் புதிதாக அணிந்து கொண்டனர்.
பூணூல்அணியப்பட்ட மறுநாள் காயத்ரி மந்திர ஜபம் என்ற நிகழ்ச்சி அந்தந்த கோயிலில் நடைபெறும். எந்த மந்திரத்தை கூறினாலூம் இறுதியாக காய்த்ரி மந்திரத்தை கூறினால் தான் மந்திரம் கூறியத்திற்கு முழு பலன் கிடைக்கும் அதன்படி இந்த நாளில் காயத்ரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu