கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயராகும் ஆட்டோ ஓட்டுனர்

கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயராகும் ஆட்டோ ஓட்டுனர்
X
கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயராகும் ஆட்டோ ஓட்டுனர்



தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட கும்பகோணம் மாநகராட்சியில் முதன்முறையாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. திமுக கூட்டணியில் திமுக 38, காங்கிரஸ் கட்சி 2, விடுதலை சிறுத்தைகள் கட்சி 1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 வார்டிலும், சுயேச்சையும், அதிமுகவினரும் தலா மூன்று இடங்களில் வெற்றி பெற்றனர். கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவியை திமுக தலைமை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது. இதனால் 18வது வார்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆட்டோ ஓட்டுனரான சரவணனை மேயர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி தலைமை அறிவித்துள்ளது. கும்பகோணம் துக்காம்பாளையம் தெருவை சேர்ந்த கந்தசாமி மகன் சரவணன். இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொறுப்பு வகித்து வருகிறார். தற்போது நகர துணைத் தலைவராக உள்ளார். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் நடத்தி வருகிறார். முதன் முறையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று உள்ள ஆட்டோ ஓட்டுநரான சரவணன் கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Next Story
ai and future of education