இந்துமக்கள்கட்சி -அனுமன்சேனா சார்பில் காதலர்களுக்கு திருமணம் செய்துவைக்க முயற்சி

இந்துமக்கள்கட்சி -அனுமன்சேனா சார்பில் காதலர்களுக்கு திருமணம் செய்துவைக்க முயற்சி
X

கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் தாராசுரம் ஐராதீஸ்வரர் கோவிலில் காதலர் தினத்தை முன்னிட்டு காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்

இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது

கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் தாராசுரம் ஐராதீஸ்வரர் கோவிலில் காதலர் தினத்தை முன்னிட்டு காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்காக மாங்கல்யம், மாலை, சீர்வரிசை பொருட்களுடன் பூங்காவிற்கு வந்தனர்.

காவல்துறையினரின் அனுமதி மறுக்கப்பட்டதால் வாயிலிலேயே நின்று மாநில பொதுச்செயலாளர் பாலா தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாணவரணி தலைவர் சத்தியமூர்த்தி, மாணவரணி நகர தலைவர் மதன், விக்னேஸ்வரன், இளைஞர் அணி நகர தலைவர் விஜய், பாஜக முன்னாள் தலைவர் ராஜா, தஞ்சை மாவட்ட சித்தர் பேரவை தலைவர் பாரதிதாசன், சிவசேனா வேல்முருகன், ஆனந்த், மற்றும் பலரை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு