விவசாயிகள் உயிர் உரங்களை பயன்படுத்த வேளாண்மை இணை இயக்குனர் வேண்டுகோள்

விவசாயிகள் உயிர் உரங்களை பயன்படுத்த வேளாண்மை இணை இயக்குனர் வேண்டுகோள்
X
விவசாயிகள் ரசாயன உரங்களை தவிர்த்து உயிர் உரங்களை பயன்படுத்த தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் உயிர் உரங்கள் உற்பத்தி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு திட உயிர் உரம் ஆண்டிற்கு 100 மெட்ரிக் டன் மற்றும் திரவ உயிர் உரங்கள் 50,000 லிட்டர் வீதம் இலக்காக பெறப்பட்டு உற்பத்தி செய்து தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் கரூர் மாவட்டங்களுக்கு வழங்கப்படுகிறது.

அவை அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. சாக்கோட்டை உயிர் உர உற்பத்தி மையத்தில் திரவ உயிர் உரங்கள் அசோஸ்பைரில்லம் (நெல்), அசோஸ்பைரில்லம் (இதர பயிர்கள்), ரைசோபியம் (பயிறு), ரைசோபியம் (கடலை), பாஸ்போபாக்டீரியா என ஐந்து வகையான உயிர் உரங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதனை பயன்படுத்துவதால் பயிர் வளர்ச்சி ஊக்குவிக்ப்படுகிறது. ரசாயன உரங்கள் பயன்படுத்துவது 25 முதல் 30% வரை குறைகிறது. மண்ணில் உயிரியல் செயல்பாடு அதிகரித்து மண்ணின் இயற்கை வளம் காக்கப்படுகிறது. மகசூல் 20 சதவிகிதம் அதிகரிக்கிறது.

எனவே தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் அனைவரும் உயிர் உரங்களை பயன்படுத்தி பயன்பெறுமாறு தஞ்சாவூர் வேளாண்மை இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!