கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் ஆண்டு விழா

கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் ஆண்டு விழா
X
கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் ஆண்டு விழா, விழாவிற்கு சகாயம் IAS சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் காலேஜ் மற்றும் அரசு பாலிடெக்னிக் காலேஜ் ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சகாயம் IAS சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் கல்லூரி நிறுவனத் தலைவர் திருநாவுக்கரசு, ஆலோசகர் கோதண்டபாணி, கல்லூரி தலைவர் செந்தில், கல்லூரி ஆடிட்டர் சண்முகம், அரசு இன்ஜினியரிங் காலேஜ் முதல்வர் முனைவர். பாலமுருகன், துணை முதல்வர் முனைவர். கலைமணி சண்முகம், கல்விப்புல தலைவர் முனைவர். ருக்மாங்கதன், அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முருகேசன், துணை முதல்வர் சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் விழாவிற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் முத்தமிழ்ச் செல்வன், பேராசிரியர் பத்மநாபன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!