கும்பகோணத்தில் அமமுக சார்பில் அமைதி ஊர்வலம்

கும்பகோணத்தில் அமமுக சார்பில் அமைதி ஊர்வலம்
X

எம்.ஜி.ஆர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த அமமுகவினர். 

எம்.ஜி.ஆர் நினைவு தினத்தை முன்னிட்டு, கும்பகோணத்தில் அமமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 34வது நினைவு தினம், குடந்தை தெற்கு ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், குடந்தை தெற்கு ஒன்றிய செயலாளர் பாலமுருகன் தலைமையில் அனுசரிக்கப்பட்டது. அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கழக வர்த்தக பிரிவு துணைசெயலாளர் அக்ரி சரவணன், கழக பொறியாளர் அணி அணை செயலாளர் பிரகதீஸ்வரன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் பெருசு ராமமூர்த்தி, மாவட்ட நெசவாளர் பிரிவு ராகவன், ஒன்றிய இணை செயலாளர் முருகேசன், நகர அம்மாபேரவை செயலாளர் ஐயா அழகேசன், கும்பகோணம் ஒன்றிய இணைச் செயலாளர் முருகேசன், சுவாமிமலை பேரூர் கழக செயலாளர் செந்தில், கீழபழையார் ஊராட்சிமன்ற தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி சுரேஷ், ஊராட்சி கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் கழக தொண்டர்கள் அமைதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்