சாக்கோட்டையில் அமமுக ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா

சாக்கோட்டையில் அமமுக ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா
X

சாக்கோட்டையில்,  எம்ஜிஆர் சிலை முன்பு தஞ்சை வடக்கு மாவட்ட விவசாய அணி இணைச் செயலாளர் சாக்கோட்டை நடுபிள்ளை தலைமையில் 5 கிலோ கேக் வெட்டப்பட்டது.

சாக்கோட்டையில் அமமுக ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா விமரிசையாக நடைபெற்றது.

கும்பகோணம் அருகே சாக்கோட்டையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, எம்ஜிஆர் சிலை முன்பு தஞ்சை வடக்கு மாவட்ட விவசாய அணி இணைச் செயலாளர் சாக்கோட்டை நடுபிள்ளை தலைமையில் 5 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

கட்சியின் தலைமை கழக பேச்சாளரும் மாநகர் இலக்கிய அணி செயலாளருமான ஆல்பா குமார், தஞ்சை வடக்கு மாவட்ட மீனவர் பிரிவுச் செயலாளர் எஸ்.எஸ். ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் வட்ட கழக செயலாளர் லட்சுமி பாண்டியன், கும்பகோணம் தெற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முத்துராஜ், வார்டு இணைச் செயலாளர் சாரங்கபாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai marketing future