சுதந்திர தினத்தை முன்னிட்டு ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் ஆம்புலன்ஸ் துவக்க விழா

சுதந்திர தினத்தை முன்னிட்டு ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் ஆம்புலன்ஸ் துவக்க விழா
X

கும்பகோணம் கிஸ்வா சார்பில் ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டது.  

கும்பகோணத்தில் கிஸ்வா சார்பில் ரூ 9 லட்சம் மதிப்பீட்டில் ஆம்புலன்ஸ் துவக்க விழாவை எம்எல்ஏ அன்பழகன் தொடங்கி வைத்தார்.

கிஸ்வா சார்பில் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா மற்றும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா கும்பகோணத்தில் நடைபெற்றது. விழாவில் கிஸ்வா சார்பில் ரூ 9 லட்சம் மதிப்பீட்டில் ஆம்புலன்ஸ் துவக்க விழாவை கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் தொடங்கி வைத்தார். விழாவிற்கு கிஸ்வா தலைவர், எம்எஸ்எம்.ஜாகிர் உசேன் தலைமை தாங்கினார். சாசன தலைவர் எம். முகமது ஜியாவுதீன் வரவேற்றார். சுதந்திரப் போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு குறித்து வழக்கறிஞர் உத்திராபதி சிறப்புரை ஆற்றினார். திட்டத் தலைவர் இன்ஜினியர் எம்.என் முகம்மது ரபி திட்ட உரையாற்றினார். அனைத்து சமுதாய மக்களுக்காக பிரசவம், விபத்து, இயற்கை பேரீடர், அவசர சிகிச்சை என கும்பகோணம் சுற்றுபுறவாசிகளுக்கு எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் ஆம்புலன்ஸ் வாகனத்தை தொடங்கி வைத்தார். விழாவில் அன்னை கல்வி குழுமம் தலைவர் அன்வர் கபீர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் ஷாஜகான், ஆம்புலன்ஸ் சேவை திட்ட இயக்குனர் ஜாகிர் உசேன் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்