கும்பகோணத்தில் அகில பாரத இந்து மகாசபா மண்டல தலைமை அலுவலகம் திறப்பு

கும்பகோணத்தில் அகில பாரத இந்து மகாசபா மண்டல தலைமை அலுவலகம் திறப்பு
X
கும்பகோணத்தில் இந்து மகாசபா மண்டல அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
கும்பகோணத்தில் அகில பாரத இந்து மகா சபாவின் தஞ்சை மண்டல தலைமை அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

கும்பகோணம் செட்டி மண்டபத்தில் அகில பாரத இந்து மகா சபாவின் தஞ்சை மண்டல தலைமை அலுவலகத்தை தேசிய துணைத் தலைவரும் மாநில தலைவருமான பாலசுப்பிரமணியம் திறந்து வைத்தார். மேலும் தஞ்சை மண்டலத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் இராம நிரஞ்சன் தலைமையில், சாம்ப வைத்தியநாதன் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ் மாநிலத் தலைவர் பாலசுப்ரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு இந்துமகா சபாவின் வளர்ச்சி குறித்து ஆலோசனை வழங்கினார். தஞ்சை மண்டல பொதுச் செயலாளர் இந்திரஜித் (எ) செல்வா வரவேற்றார். ஆலய பாதுகாப்பு பிரிவு தஞ்சை மாவட்ட செயலாளர் உதயகுமார் நன்றி கூறினார். கூட்டத்தில் 4 மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் கும்பகோணத்தை ஆன்மீக நகரமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் மற்றும் நவகிரகங்களை மையப்படுத்தி கும்பகோணத்தில் யாத்ரி நிவாஸ் அமைத்து தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!