பாபநாசம் தாலுகா அலுவலகம் முன் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பாபநாசம் தாலுகா அலுவலகம் முன் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
X

பாபநாசம் தாலுகா அலுவலகம் முன் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அலுவலகம் முன்பு அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அலுவலகம் முன்பு, மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு உரிய இழப்பீடும், நிவாரணமும், வழங்க கோரி அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சை வடக்கு மாவட்ட பொருளாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராம்குமார் தலைமையில் நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய செயலாளர் பழனிசாமி வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட விவசாய பிரிவு தலைவர் அண்ணாமலை, முன்னாள் எம்.எல்.ஏ. இளமதி சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் சூரியநாராயணன், ராமச்சந்திரன், கோபிநாதன், பேரூர் செயலாளர்கள் முருகன், காமராஜ், சின்னதுரை, பொதுக்குழு உறுப்பினர் மோகன், மாவட்ட கவுன்சிலர் கண்ணபிரான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடும், நிவாரணமும் வழங்க கோரி பலர் கண்டன உரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பேரவை துணைச் செயலாளர் ஜெகநாதன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் கண்ணன், மாவட்ட நிர்வாகிகள் சின்னையன், நிறைமதி முருகானந்தம், அம்மாபேட்டை நகரத் துணைச் செயலாளர் வீரய்யன், மாவட்ட பிரதிநிதிகள் முருகன், சின்னப்பா, ஒன்றிய பொருளாளர் செல்வம், ஹாஜா ஷரீப், சார்பு அணி ஒன்றிய நிர்வாகிகள் ஏர்டெல் சதீஷ்குமார், செந்தில்குமார் மற்றும் கூட்டுறவு சங்கத் தலைவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். பாபநாசம் பேரூர் செயலாளர் சின்னையன் நன்றி கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!