/* */

டெல்டா மாவட்டங்களில் உளுந்து சாகுபடி: வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்

டெல்டா மாவட்டங்களில் நெல் தரிசில் உளுந்து சாகுபடி செய்வது குறித்து பாபநாசம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

டெல்டா மாவட்டங்களில் உளுந்து சாகுபடி: வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்
X

மாதிரி படம் 

பாபநாசம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வெளியிட்டுள்ள மோகன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தஞ்சை மாவட்டம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடைக்குபின் நெல் தரிசில் ஜனவரி மாதத்திலிருந்து பிப்ரவரி மாதம் வரை உளுந்து சாகுபடி செய்யப்படுகிறது. இதற்கு ஆடுதுறை 3, ஆடுதுறை 6 உள்ளிட்ட உளுந்து இரகங்கள் விதைக்கப்படுகிறது.

தொடர்ச்சியாக பயிரிடும் இடங்களில் உகந்த மண் ஈரப்பதத்தில் நெற்பயிர் அறுவடை செய்வதற்கு 5 - 10 நாட்கள் முன்னதாக விதைகளை விதைக்க வேண்டும். நெல் அறுவடை இயந்திரத்தின் மூலம் அறுவடை செய்யும் பகுதிகளில் அறுவடை செய்யும் முன் உளுந்து விதைகளை விதைக்க வேண்டும். நெல் தரிசில் உளுந்து விதைக்கும் பொழுது எக்டருக்கு 25 - 30 கிலோ விதை அளவு பயன்படுத்த வேண்டும்.

விதைநேர்த்தி செய்யும் பொழுது ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைகோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனஸ் அல்லது 2 கிராம கார்பண்டசிம் அல்லது திரம் கொண்டு விதை நேர்த்தி செய்து 24 மணி நேரம் கழித்து விதைக்க வேண்டும். உயிரியல் கட்டுபாட்டு காரணிகளான ரைசோபியம் அல்லது அசோஸ்பைரில்லம் 600 கிராம் விதை நேர்த்தி செய்து விதைக்கலாம். மண்ணின் ஈரப்பதத்தை பொருத்து 10-15 நாள் இடைவெளியில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

நெல் தரிசில் எக்டேருக்கு 2 % டிஏபி கரைசல் பூக்கும் பருவத்தில் 15 நாட்கள் இடைவெளியில் 2 முறை தெளிக்க வேண்டும். பயறு நுண்ணூட்டம் எக்டருக்கு 5 கிலோ அளவில் அளிப்பதினால் உளுந்தில் ஏற்படும் நுண்ணூட்ட சத்து குறைபாடுகளை சரிசெய்யலாம் . நெல் தரிசில் ஆடுதுறை இரகங்கள் 600-650 குவிண்டால்களும் கோ 4 இரக உளுந்து 600 குவிண்டால்களும் மகசூல் எடுக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 20 Jan 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  6. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  7. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  8. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  10. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...