கும்பகோணம் தனி மாவட்டம்: ஆடுதுறை பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்

கும்பகோணம் தனி மாவட்டம்: ஆடுதுறை பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்

ஆடுதுறை பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது. 

கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டி ஆடுதுறை பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சியில் ஆடுதுறை சீராய்வு குறித்து அவசர கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் ஸ்டாலின் தலைமையிலும், செயல் அலுவலர் சிவலிங்கம் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணைத் தலைவர் கமலா சேகர் உள்பட அனைத்து வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், பேரூராட்சி பொதுமக்களுக்கு சுமை ஏற்படாத வண்ணமும், பேரூராட்சி வளர்ச்சிப்பணிகள் பாதிப்பு ஏற்படாத வகையிலும் சொத்து வரி விதிப்பது குறித்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்பட்டது. மேலும் தமிழக அரசு உடனடியாக கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story