கருப்பூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

கருப்பூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
X

தண்ணீர் பந்தலை தஞ்சை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

கருப்பூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.

கும்பகோணம் அருகே கருப்பூரில் அதிமுக சார்பில், கும்பகோணம் அதிமுக கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சோழபுரம் அறிவழகன் தலைமையில், கருப்பூர் ஊராட்சி ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பகவதி ஏற்பாட்டில் கோடைக்கால தண்ணீர் பந்தலை, தஞ்சை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அதிமுக அவைத் தலைவர் ராம்குமார், மாவட்டக் கழகப் பொருளாளர் கண்ணபிரான், மாநில பிரிவு செயலாளர் லெனின், பகுதி செயலாளர்கள் சேகர், ராம. ராமநாதன், குடந்தை மேற்கு ஒன்றியச் செயலர் செந்தில், திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் முத்துகிருஷ்ணன், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கோவி.மகாலிங்கம் கலந்து கொண்டனர்.

மேலும், பகுதி அதிமுக செயலாளர் ராஜ், மாவட்ட பிரிவு செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, மோகன்ராஜ், கவிதாஸ்ரீதர், சின்னையன், கருப்பூர் செல்லப்பன், கோவி.ரமணன், முன்னாள் பேரூர் கழகச் செயலாளர் கோவி.கேசவன், ஹரிகிருஷ்ணன், பாண்டியன், முன்னாள் ஒன்றிய அமைப்பாளர் ஜோதிநாதன், கருப்பூர் கழக நிர்வாகிகள் சாந்தி, பாரிவள்ளல், பாபு மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!