திருப்பனந்தாளில் நடந்த சாலை விபத்தில் மூதாட்டி பலி

திருப்பனந்தாளில் நடந்த சாலை விபத்தில் மூதாட்டி பலி
X
திருப்பனந்தாளில் ஜே.சி.பி. மோதியதில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி பலியானார்.

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் ஒன்றியம் குறிச்சி அடுத்த வடுகங்குடி பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி மனைவி விஜயா (50). இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர். இவர் மனநிலை பாதிக்கப்பட்ட காரணத்தால் வீட்டில் இல்லாமல் சாலைகளில் சுற்றி திரிந்துள்ளார். இந்நிலையில் திருப்பனந்தாள் கடைவீதியில் உள்ள காவல் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது இவர் பின்னே வந்த ஜே.சி.பி. இடித்ததில் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

உடனே அவரை மீட்டு கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவரது உடலை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக திருப்பனந்தாள் போலீசார் ஜே.சி.பி. வாகனத்தை பறிமுதல் செய்து அதை ஓட்டி வந்த டிரைவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த சங்கீத பாரதி மகன் மஹனை குமார் என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!