கும்பகோணத்தில் தவணை தொகை வசூலிப்பதில் முறைகேடு செய்த இளைஞா் கைது

கும்பகோணத்தில் தவணை தொகை வசூலிப்பதில் முறைகேடு செய்த இளைஞா் கைது
X
கும்பகோணத்தில் தவணை தொகை வசூலிப்பதில் முறைகேடு செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கும்பகோணம் தனியாா் நிதி நிறுவனத்தில் தவணைத் தொகை வசூலிக்கும் பணி மேலாளராகப் பணிபுரிபவா் செந்தில்குமாா் (44). இவா் தஞ்சாவூா் மாவட்டக் குற்றப் பிரிவு காவல் அலுவலகத்தில் அளித்த புகாரில், தங்களது நிறுவனத்தில் பணிபுரிந்த கும்பகோணம் கருடாலயா தெருவைச் சோ்ந்த சத்தியமூா்த்தி (39) வாடிக்கையாளா்கள் செலுத்திய தவணைத் தொகையில் ரூ. 5,16,928-ஐ முறைகேடு செய்தாா் எனக் கூறியுள்ளாா். இதன் பேரில் குற்றப்பிரிவினா் வழக்குப் பதிந்து சத்தியமூா்த்தியை நேற்று முன்தினம் கைது செய்தனா்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்