ஆடி கடைசி வெள்ளி: தேனுபுரீஸ்வரர் துர்க்கையம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் துர்க்கையம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்.
பொதுவாக வெள்ளிக் கிழமைகளுக்கென்று தனி சிறப்பு உண்டு. அதிலும் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நாளில் துர்கை அம்மனுக்கு பெண்கள் விரதம் இருந்து வழிபாடு செய்ததால் கோடி நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்நிலையில் கடந்த ஆண்டு கொரோனா பரவலால் கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் ஆடி மாதம் பக்தர்கள் அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதேபோல் இந்த ஆண்டு ஆடி முதல் வெள்ளிகிழமை திறக்கப்பட்டு இருந்த கோவில்கள் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பால், இந்த வாரம் முதல் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் கோவில்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.
இருப்பினும் ஆடி கடைசி வெள்ளியான இன்று கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் துர்க்கை அம்மன் கோவில் பக்தர்கள் அனுமதியின்றி மூடப்பட்டிருந்தாலும், நுழைவாயில் முன்பு நெய்விளக்கேற்றி வழிபட்டனர். மேலும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் கயிறு, குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை வழங்கியும், திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் நடக்க வேண்டியும், குழந்தை இல்லாத பெண்கள் குழந்தைப்பேறு வேண்டியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu