சுவாமிமலை பகுதியில் முழு ஊரடங்கால் கலையிழந்த காணும்பொங்கல்

சுவாமிமலை பகுதியில் முழு ஊரடங்கால் கலையிழந்த காணும்பொங்கல்
X

ஊரடங்கால் வெறிச்சோடிய சுவாமிமலை சாலைகள்.

சுவாமிமலை பகுதியில் முழு ஊரடங்கால் காணும்பொங்கல் கலையிழந்து காணப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை பகுதியில் கொரோனா முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் கூடி மகிழும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கலைநிகழ்ச்சிகள் மற்றும் பண்டிகை கால விளையாட்டு போட்டிகள் நடைபெறா வண்ணம் தடுத்து நிறுத்தினர்.

மேலும் நீர்நிலைப் பகுதிகளில் பொது மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு தடுப்பு அரண்கள் வைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டனர்.

சுவாமிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டனர். இதன் காரணமாக வழக்கம்போல் நடைபெறும் காணும் பொங்கல் விழா நடப்பு வருடம் கலை இழந்து காணப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!