திருக்கடையூர் அருகே 700 ஆண்டுகள் தொன்மையான சிலைகள் மீட்பு

திருக்கடையூர் அருகே 700 ஆண்டுகள் தொன்மையான சிலைகள் மீட்பு
X

பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள்.

திருக்கடையூர் அருகே 700 ஆண்டுகள் தொன்மையான 2 உலோக சிலைகளை சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் கைப்பற்றினர்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் அருகே டி.மணல்மேடு கிராமத்தில் தொன்மையான 2 உலோக சிலைகள் கடத்திச்செல்ல பதுக்கி வைத்திருப்பதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி உத்தரவின்படி, ஐஜி. தினகரன் வழிகாட்டுதல்படி கூடுதல் எஸ்பி ராஜாராம் தலைமையில் எஸ்ஐ சின்னதுரை, போலீசார் மதிக்குமார், கோபால், குமராராஜா, ஜெகதீஷ், ராம்குமார், பிரவீன்செல்வக்குமார் ஆகியோர் அடங்கிய சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் சிலைகளை வாங்கும் வியாபாரிகள் போல் தங்களை காட்டிக்கொண்டு சிலை கடத்தல்காரனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சிலை கடத்தல்காரன் 2 உலோக சிலைகளுக்கு ரூ.2 கோடி விலை பேசினார்.

சிலை கடத்தல்காரனை நம்பவைத்து சிலைகளை காண்பித்தவுடன் அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் அருகே டி.மணல்மேடு ரோட்டு தெருவை சேர்ந்த சுரேஷ் (32) என்பதும், வெளிநாட்டிற்கு கடத்த பதுக்கி வைத்திருந்த புத்தமத பெண் கடவுள் உலோகச்சிலை ஒன்றும், அமர்ந்த நிலையில் விநாயகர் உலோக சிலை ஒன்றையும் கைப்பற்றி சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு அலுவலகத்தில் 2 உலோக சிலைகளையும் ஒப்படைத்தனர்.

இதனைத்தொடர்நது போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா வழக்குப்பதிந்து சுரேஷூடம் விசாரணை மேற்கொண்டு கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். புத்தமத கடவுளான அபலோகிதேஸ்வராவின் மனைவி தாராதேவி சிலை என்றும், திபெத் நாட்டில் காக்கும் கடவுளாக வழிபடுவதாகவும்,700 ஆண்டுகள் தொன்மையானது என்றும், விநாயகர் சிலை 300 ஆண்டுகள் தொன்மையானது என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!