சுவாமிமலை பேரூராட்சியில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 62 மனுக்களும் ஏற்பு

சுவாமிமலை பேரூராட்சியில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 62 மனுக்களும் ஏற்பு
X

சுவாமிமலை பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் உஷா தலைமையில் நடைபெற்ற வேட்புமனு பரிசீலனை.

சுவாமிமலை பேரூராட்சியில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருந்த 62 மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம், சுவாமிமலை பேரூராட்சியில் உள்ளாட்சித் தேர்தலில் 62 வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். நேற்று காலை வேட்புமனுத்தாக்கல் பரிசீலனை நடைபெற்றது.

பரிசீலனையில் திமுக, அதிமுக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், பாரதிய ஜனதா கட்சி, உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டம் சுவாமிமலை பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் உஷா தலைமையில் நடைபெற்றது.

இந்த பரிசீலனை கூட்டத்தில் மனுத்தாக்கல் செய்த 62 மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் உஷா செய்தியாளரிடம் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!