'6 சுவாமி சிலைகள் அமெரிக்காவில் இருந்து விரைவில் வரும்'- ஏ.டி.ஜி.பி.
கும்பகோணத்தில் நவீன காவல் கட்டுப்பாட்டு அறையை ஏ.டி.ஜி.பி. ஜெயந்த் முரளி ஆய்வு செய்தார்.
கும்பகோணத்தில் நவீன காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தமிழக சிலை திருட்டு மற்றும் கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் துறை கூடுதல் இயக்குனர் (ஏ.டி.ஜி.பி) ஜெயந்த் முரளி வருகை தந்தார். அப்போது காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களுக்கு ஏ.டி.ஜி.பி. ஜெயந்த் முரளி பேட்டியளித்தபோது
தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் திருடி கடத்தப்பட்ட ஆறு சிலைகள் விரைவில் அமெரிக்காவிலிருந்து தாயகம் கொண்டு வரப்படும் என்றும், கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சிலை திருட்டு வழக்குகளை விரைவுபடுத்துவதற்காகவும், கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள உலோக சிலைகள் பாதுகாப்பு மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வந்திருப்பதாகவும் தெரிவித்த அவர், சர்வதேச சிலைகள் கடத்தல் மன்னன் சுபாஷ் சந்த்ரகபூர் மீதான வழக்குகளின் விசாரணை தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது என்றும், சிலை திருட்டு மற்றும் தடுப்பு காவல்துறையை பலப்படுத்துவதற்கு 345 கூடுதல் பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், சுவாமிமலை அருகேயுள்ள திருவலஞ்சுழி உள்ளிட்ட மேலும் சில இடங்களில் விரைவில் உலோக சிலைகள் பாதுகாப்பு மையங்கள் புதிதாக திறக்கப்பட இருப்பதாகவும் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu