53 அடி உயர வெண்கல அடைக்கல அன்னை சிலை - சுவாமிமலை சிற்பி வடிவமைப்பு

53 அடி உயர வெண்கல அடைக்கல அன்னை சிலை - சுவாமிமலை சிற்பி வடிவமைப்பு
X

53 அடி உயர மாதா சிலை.

ஏலாக்குறிச்சியில் நிறுவுவதற்காக 53 அடி உயர வெண்கல அடைக்கல அன்னை சிலையை சுவாமிமலை சிற்பி வடிவமைத்து உள்ளார்.

சுவாமிமலை கள்ளர் தெருவில் சிற்பக்கூடம் நடத்தி வருபவர் சிற்பி பிரவீன். சுவாமிமலையில் தனது இல்லத்திலேயே சிற்பக்கூடம் வடிவமைத்து சிலைகள் செய்து வருகிறார். இவரை அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள அருள்நிறை அடைக்கல அன்னை திருத்தலத்திற்கு 53 அடி உயர வெண்கல சிலை அமைத்து தர வேண்டும் என கடந்த 2011ஆம் ஆண்டு கேட்டுள்ளனர்.

அதைத்தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக தனது சிற்பக் கூடத்தில் இருந்து வார்ப்பு வேலைகள் செய்யப்பட்டு, பின்னர் அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சியில் உள்ள அருள்நிறை அடைக்கல அன்னை திருத்தலத்தில் ஜெபமாலை பூங்காவில் 24 ஆயிரம் கிலோ பித்தளை, வெண்கலம், ஐம்பொன் உள்ளிட்ட பொருட்கள் கலந்து 19 ஆயிரம் கிலோ எடையுடைய அடைக்கல அன்னையின் முழு உருவச் சிலையை செய்து முடித்துள்ளார். இதன் மதிப்பு ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் ஆகும். இதன் திறப்பு விழா ஏப்ரல் 30ஆம் தேதி மாலை நடைபெற உள்ளது.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!