கும்பகோணத்தில் தொடர் மழையால் சுவர் இடிந்து விழுந்து 4 வயது சிறுமி உயிரிழப்பு

கும்பகோணத்தில் தொடர் மழையால் சுவர் இடிந்து விழுந்து 4 வயது சிறுமி உயிரிழப்பு
X

சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த நான்கு வயது சிறுமி அனன்யா.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தொடர் மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு வயது சிறுமி உயிரிழப்பு.

தொடர் மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு வயது சிறுமி உயிரிழப்பு.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தேனாம்படுகை ஊராட்சியில் கௌதமன் என்பவர் வீட்டின் பக்க சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் தூங்கி கொண்டிருந்த கௌதமன் மற்றும் அவரது மகள் அனன்யாவுக்கு (4) ஆகிய இருவரும் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனர்.

உடனடியாக அவர்களை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று அனன்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பட்டீஸ்வரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுவர் இடிந்து விழுந்து 4 வயது குழந்தை உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!