பாபநாசம் பகுதியில் தொடர் மழைக்கு 25 கால்நடைகள் உயிரிழப்பு

பாபநாசம் பகுதியில் தொடர் மழைக்கு 25 கால்நடைகள்  உயிரிழப்பு
X

பைல் படம்

பாபநாசம் தாலுக்கா, விழிதியூர் ஊராட்சியில் தொடர்மழை காரணமாக இதுவரை 25 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

பாபநாசம் தாலுக்கா, விழிதியூர் ஊராட்சியில் தொடர்மழை காரணமாக இதுவரை 25 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

விழிதியூர் அமலாஜெய்சங்கர் என்வரது பசுமாடு மற்றும் கன்றுகுட்டியும் உயிரிழந்தது. மேலும் ஆதிதிராவிடர்தெரு தீபா என்பவரது 7 ஆடுகள், வான்மதி என்பவரது 5 ஆடுகள், பிரேமலதா என்பவரது 2 ஆடுகள், தங்கையன் என்பவரது 2 ஆடுகள், கோவிந்தராஜ் என்பவரது 2 ஆடுகள், ரூபா என்பவரது 2 ஆடுகள், சாவித்திரி என்பவரது 2 ஆடுகள் மற்றும் விஜயகுமாரி என்பவரது 1 பசுகன்று உள்பட ஒரே கிராமத்தில் 22 ஆடுகள் 1 பசுமாடு தொடர்மழையால் உயிரிந்தன. ஊராட்சி மன்ற தலைவர் கலையரசிகோவிந்தராஜன் இறந்த கால்நடைகளை நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

மேலும் இதுகுறித்து வருவாய்துறையினருக்கும், அரசு கால்நடை மருத்துவருக்கும் தகவல் தெரிவித்தார். விழிதியூர் பகுதியில் தொடர்ச்சியாக கால்நடைகள் இறந்து வருவது குறித்து வருவாய்துறையினர் மற்றும் கால்நடை பராமரிப்புதுறையினர் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!