சுவாமிமலை அருகே உரக்கடையை சேதப்படுத்திய வழக்கில் 2 வாலிபர்கள் கைது

சுவாமிமலை அருகே உரக்கடையை சேதப்படுத்திய வழக்கில் 2 வாலிபர்கள் கைது
X

உரக் கடையை சேதப்படுத்திய வழக்கில் கைதான் வாலிபர்கள் தீபன்ராஜ், ராமர்.

சுவாமிமலை அருகே உரக்கடையை அடித்து உடைத்த வழக்கில் 2 வாலிபர்கள் கைது.

கும்பகோணம் கீழ ஐயன் தெருவில் வசிப்பவர் பிச்சை மகன் மதியழகன் (58). இவர் சுவாமிமலையை அடுத்துள்ள திருப்புறம்பியம் கடை வீதியில் உரக் கடை நடத்தி வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் மதியழகன் மகன் தீபன் ராஜ் (24) என்பவரும், வேடப்பன் மகன் ராமர் (24) ஆகிய இருவரும் அதே தெருவில் ஏற்பட்ட ஒரு துக்க நிகழ்விற்காக இவரது உரக் கடையை மூடும்படி கூறியுள்ளனர். மூட மறுத்ததால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் உரக்கடையை அடித்து உடைத்து சேதப்படுத்தி தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.

இதுகுறித்து கடை உரிமையாளர் மதியழகன் கொடுத்த புகாரின் பேரில் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து உரக் கடையை அடித்து உடைத்த வழக்கில் தலைமறைவாக இருந்த திருப்புறம்பியம் தீபன்ராஜ், ராமர் ஆகிய இருவரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?