கும்பகோணம் மாஸ் கல்வியியல் கல்லூரியின் 18-வது வருட ஆண்டு விழா

கும்பகோணம் மாஸ் கல்வியியல் கல்லூரியின் 18-வது வருட ஆண்டு விழா
X

கும்பகோணம் மாஸ் கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது.

கும்பகோணம் மாஸ் கல்வியியல் கல்லூரியில் 18வது வருட ஆண்டு விழா மிக சிறப்பாக நடந்தது.

கும்பகோணம் மாஸ் கல்வியல் கல்லூரியில் 18வது வருட ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா மாஸ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு, கேடயம் வழங்கப்பட்டது.

செயலாளர் மாலினி விஜயகுமார் முன்னிலை வகித்தார். கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜெயக்குமாரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சரவணன் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் அருள்தாஸ், பிஎட் கல்லூரி முதல்வர் கருணாநிதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கல்லூரியின் தாளாளர் விக்னேஷ் சிறப்புரையாற்றினார். விழாவிற்கான ஏற்பாடுகளை துணை முதல்வர் சரவணன் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story