பாபநாசம் கூட்டுறவு நகர வங்கியின் 106-வது பேரவை கூட்டம்

பாபநாசம் கூட்டுறவு நகர வங்கியின் 106-வது பேரவை கூட்டம்
X

பாபநாசம் கூட்டுறவு நகர வங்கியின் 106-வது பேரவை கூட்டம் நடைபெற்றது. 

பாபநாசம் கூட்டுறவு நகர வங்கியின் 106-வது பேரவை கூட்டம் இன்று நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் கூட்டுறவு நகர வங்கியின் 106-வது பேரவை கூட்டம் வங்கித் தலைவர் சபேசன் தலைமையில் நடைபெற்றது. பாபநாசம் முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தார்.

வங்கி மேலாண் இயக்குனர் தமிழ்செல்வி வரவேற்றுப் பேசி நிர்வாக அறிக்கை சமர்ப்பித்தார். வங்கி பொது மேலாளர் தியாகராஜன் 2020-2021 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை வாசித்தார்.

கூட்டத்தில் ஓய்வு பெற்ற மாவட்ட ஆட்சித்தலைவர் மகரபூஷணம், ஓய்வுபெற்ற மாவட்ட கருவூலத்துறை அதிகாரி அன்பழகன், தேசிய நல்லாசிரியர் கலைச்செல்வன், துணைத் தலைவர் சதீஷ், வங்கி இயக்குனர்கள் ரத்தினகுமார், முருகானந்தம், முருகதாஸ், பாலகிருஷ்ணன், லியாகத் அலி, ரெஜியா பேகம், சுமதி, லலிதா, சாந்தா ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

இக்கூட்டத்தில் உதவி மேலாளர் ரவிச்சந்திரன் , உதவியாளர்கள் பிரவின்குமார், உஷாராணி, உஷா, சங்கீதா, பார்கவி, உதயகுமார், அலுவலக உதவியாளர் ராஜேந்திரன் மற்றும் வங்கி வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். அய்யம்பேட்டை கிளை மேலாளர் ஆனந்தி நன்றி கூறினார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!