/* */

தஞ்சையில் விற்பனைக்கு வந்த 100 விதமான கிறிஸ்துமஸ் ஸ்டார்கள்

தஞ்சையில் 100 விதமான கிறிஸ்துமஸ் ஸ்டார்கள் விற்பனைக்கு வந்துள்ளது.

HIGHLIGHTS

தஞ்சையில் விற்பனைக்கு வந்த 100 விதமான கிறிஸ்துமஸ் ஸ்டார்கள்
X

புதிய வகை கிறிஸ்துமஸ் ஸ்டார்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

கிறிஸ்துமஸ் விழாவுக்கு இன்னும் 21 நாட்களே உள்ளன. இந்த நிலையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கிறிஸ்துமஸ் குடில் அமைப்பது, கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் ஊர்வலம் உள்ளிட்டவை தொடங்கி நடைபெறுவது வழக்கம். இந்த பண்டிகையில் முக்கியமாக இடம் பிடிப்பது ஸ்டார்கள் ஆகும். வீடுகள் மற்றும் தேவாலயங்களில் வண்ண, வண்ண விளக்குகளால் ஆன ஸ்டார்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும்.

வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வண்ண, வண்ண ஸ்டார்கள் விற்பனைக்காக கடைகளில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. பல கவர்ச்சியான வண்ணங்களில் மின் விளக்கு பொருத்தப்பட்ட ஸ்டார்களை கிறிஸ்தவர்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கிறார்கள்.

சாதாரண ஸ்டார்கள் ரூ.45 முதல் ரூ.350 வரையில் கிடக்கிறது. பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடிகளால் ஆன ஸ்டார்கள் ரூ.250 முதல் ரூ.1,050 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இது தவிர எல்.இ.டி. விளக்குகளால் ஆன ஸ்டார் ரூ.140 முதல் ரூ.550 வரை விற்கப்படுகிறது. இந்த ஆண்டு புதிய வரவாக காகித எல்.இ.டி. விளக்குகளால் ஆன ஸ்டார் அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. தற்போது 100-க்கும் மேற்பட்ட வகையான ஸ்டார்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

இதே போல் கிறிஸ்துமஸ் மரங்களும் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் குடில்கள் அமைப்பது வழக்கம். ஏசு கிறிஸ்து பிறப்பை சித்தரிக்கும் வகையில் இந்த கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதில் வைப்பதற்காக கிறிஸ்துமஸ் மரம் உள்ளிட்ட பொம்மைகள் விற்பனை செய்யப்படுகின்றன. குடில் செட் ரூ.375 முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதில் கிறிஸ்துமஸ் மரம் 1 அடி முதல் 10 அடி உயரம் வரை உள்ளது.

மரத்துடன் பால், பெல், இயேசு கிறிஸ்து மற்றும் பொம்மைகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இதே போல் கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மைகள் ரூ.400 முதல் ரூ.5 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தோரணங்கள், பைபிள் டைரியும் விற்பனைக்கு வந்துள்ளன.

Updated On: 4 Dec 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  9. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  10. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்