கும்பகோணத்தில் லாரியில் கடத்தி வரப்பட்ட 1 டன் குட்கா பறிமுதல்

கும்பகோணத்தில் லாரியில் கடத்தி வரப்பட்ட  1 டன் குட்கா பறிமுதல்
X
கும்பகோணத்தில் லாரியில் கடத்தி வரப்பட்ட 1 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா உத்தரவின்படி கும்பகோணம் காவல் துணை கண்காணிப்பாளர் அசோகன் மேற்பார்வையில் கிழக்கு காவல் ஆய்வாளர் அழகேசன் மற்றும் தனிப்படை உதவி காவல் ஆய்வாளர் கீர்த்தி வாசன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா, செல்வகுமார், காவலர்கள் பாலசுப்ரமணியன், ஜனார்த்தன், நாடிமுத்து ஆகியோர் இன்று வாகன தணிக்கை செய்தனர்.

அப்போது ரகசிய தகவலின் அடிப்படையில் கண்டைனர் லாரியில் ரகசிய அறை அமைத்து பெங்களூர் பகுதியிலிருந்து நள்ளிரவில் கடத்தி வரப்பட்ட சுமார் 1,100 கிலோ பான் மசாலா குட்கா (1 டன்) பொருட்களை அதிரடியாக லாரியுடன் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக 6 நபர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!