கோவில் திறந்ததும் விநாயகரை வலம் வந்து வணங்கிய பசு

கோவில் திறந்ததும் விநாயகரை வலம் வந்து வணங்கிய பசு
X
கும்பகோணம் மடத்துத் தெருவில் உள்ள பகவத் விநாயகர் கோவிலில் விநாயகரைத் வலம் வந்து தரிசனம் செய்த பசு.

கும்பகோணம் மடத்துத் தெருவில் பகவத் விநாயகர் கோவிலில் 100 ஆண்டுகள் பழமையான கோயிலாகும். இக்கோயில், விநாயகரை, வணிகர்கள், பொதுமக்கள், ஆன்மீக பக்தர்கள் தினந்தோறும் நடைபெறும் பூஜைகளை தரிசனம் செய்து வந்தனர். மேலும் சுமார் பத்தடி உயரமுள்ள யானைத் தந்தம் இருப்பதால் பகவத் விநாயகருக்கு கூடுதலாக சிறப்பும் உண்டு. இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக, அனைத்து கோயில்களும் மூடப்பட்டு நித்திய கால பூஜைக்கு மட்டும் அரசு அனுமதி அளித்தது.

இந்நிலையில் அனைத்து கோவிலும் திறக்கப்பட்டு பொதுமக்கள் தரிசனத்திற்காக இன்று முதல் அரசு அனுமதி அளித்தையடுத்து, காலை 6 மணி அளவில் கும்பகோணம் பகவத்விநாயகர் கோவிலில் மூலவரின் கதவுகள் திறக்க படுவதற்கு முன்பு, அங்கு வந்த பசுமாடு, பிரகாரம் சுற்றி வந்து, விநாயகரை வணங்கியது.

இதனை பார்த்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் விநாயகரையும், பசு மாட்டையும் தரிசனம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!