ஓய்வு பெற்ற விஏஓ வீட்டில் 15 பவுன் நகைகள் கொள்ளை

ஓய்வு பெற்ற விஏஓ வீட்டில் 15 பவுன்  நகைகள் கொள்ளை
X
ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகரை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற விஏஓ பாரதி. இந்நிலையில் பாரதிக்கு உடல்நிலை குறைவு காரணமாக சென்னையில் உள்ள மகன் வீட்டுக்கு சென்று மருத்துவமனையில் கடந்த 10 நாட்கள் சிகிச்சை பெற்று, சிகிச்சை முடிந்து இன்று காலை வீட்டுக்கு வந்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, இரண்டு பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து கும்பகோணம் தாலுக்கா காவல் நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி